ஆன்மிகம்

மகாளய அமாவாசை வழிபாடு + "||" + Worship of the amavasai

மகாளய அமாவாசை வழிபாடு

மகாளய அமாவாசை வழிபாடு
“மறந்தவர்களுக்கு மகாளய அமாவாசை” என்று சொல்வது வழக்கம். எனவே முன்னேற்றம் ஏற்பட முன்னோர்களை வழிபட வேண்டிய நாள் மகாளய அமாவாசை என்பதை மறந்து விடாதீர்கள்.
இதுவரை திதி கொடுக்க மறந்தவர்கள் இன்றைய தினத்தில் திதி கொடுத்தால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வர் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டுக்கான மகாளய அமாவாசை 19.9.2017 அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதன் மூலமும், பித்ருக்களுக்கு திதி கொடுப்பதன் மூலமும் முன்னேற்றங்களை வரவழைத்துக் கொள்ள இயலும்.

நவராத்திரி விழா

19.9.2017 (செவ்வாய்க்கிழமை) மகாளய அமாவாசை
21.9.2017 (வியாழக்கிழமை) நவராத்திரி விழா ஆரம்பம்
28.9.2017 (வியாழக்கிழமை) துர்க்காஷ்டமி
29.9.2017 (வெள்ளிக்கிழமை) சரஸ்வதி பூஜை
30.9.2017 (சனிக்கிழமை) விஜயதசமி