ஆன்மிகம்

கற்பக விநாயகரை கண் திறந்து பாருங்கள் + "||" + Open your eyes

கற்பக விநாயகரை கண் திறந்து பாருங்கள்

கற்பக விநாயகரை கண் திறந்து பாருங்கள்
கற்பக விநாயகர் திருவுருவப் படத்தை வைத்து வழிபட்டால் கற்பக விருட்சமாய் வளரும் வகையில் வாழ்க்கை அமையும்.
மிழ் புத்தாண்டான சித்திரை மாதப் பிறப்பின் போது, அனைவரும் அதிகாலையில் கண் விழித்ததும், கனிகளைப் பார்ப்பார்கள். அதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் கனி போல் இனிப்பான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதே போல் ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்க நாளில், உறக்கம் களைந்து எழுந்ததும் எதனைப் பார்ப்பது என்று பலரும் நினைக்கலாம். புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்ததும் நம் விழியில் தென்படும் உருவம், வாழ்வின் முன்னேற்றத்திற்கு வித்திடுவதாக இருக்க வேண்டும். எனவே தெய்வத் திருவுருவங்களின் மீது விழிப்பது நல்லது. நிலைக்கண்ணாடி, தண்ணீர், ஆலயக் கோபுரம் போன்றவற்றையும் பார்க்கலாம்.

பூஜையறையில் கனி வர்க்கங்களையும், பரப்பி வைத்துப் பார்த்தால் கனிவான வாழ்க்கை அமையும். வலம்புரிச் சங்கு வைத்திருப்பவர்கள் அதில் காசுகளைப் பரப்பி வைத்து, அதன் முகத்தில் விழிக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக கற்பக விநாயகர் திருவுருவப் படத்தை வைத்து வழிபட்டால் கற்பக விருட்சமாய் வளரும் வகையில் வாழ்க்கை அமையும்.