இந்த வார விசேஷங்கள்


இந்த வார விசேஷங்கள்
x
தினத்தந்தி 4 April 2018 8:19 AM GMT (Updated: 4 April 2018 8:19 AM GMT)

.

3-4-2018 முதல் 9-4-2018 வரை

3-ந் தேதி (செவ்வாய்)

சங்கடஹர சதுர்த்தி.

தென்திருப்பேரை பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதி உலா.

திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் காலையில் கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா, இரவு சுவாமியும் அம்பாளும் கமல பல்லக்கில் கொள்ளிடம் எழுந் தருளல்.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலில் ரத உற்சவம், இரவு தங்கமயில் வாகனத்தில் வீதி உலா.

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு சூரிய பிரபை வாகனத்திலும் பவனி.

சமநோக்கு நாள்.

4-ந் தேதி (புதன்)

திருக்குறுங்குடியில் 5 நம்பிகள் 5 கருட வாகனத்தில் பவனி.

திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் திருவீதி உலா.

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கேடயத்தில் புறப்பாடு.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் பூத வாகனத்தில் வீதி உலா.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு.

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி சேஷ வாகனத்திலும் பவனி வருதல்.

கீழ்நோக்கு நாள்.

5-ந் தேதி (வியாழன்)

வராக ஜெயந்தி.

திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

கோவில்பட்டி பூவண்ணநாதர், பாபநாசம் சிவன் ஆகிய தலங்களில் உற்சவம் தொடக்கம்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி நவநீத சேவை, தெப்போற்சவ விழா.

திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் கருட வாகனத்தில் புறப்பாடு.

உப்பலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளிப் பல்லக்கில் பவனி.

சமநோக்கு நாள்

6-ந் தேதி (வெள்ளி)

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் விருட்ச சேவை.

கோவில்பட்டி பூவண்ணநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.

திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் காலை சிம்ம வாகனத்தில் வீதி உலா.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் மின்விளக்கு தீப அலங்கார தேரில் பவனி.

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை திருப்பல்லக்கிலும், இரவு சுவாமியும் அம்பாளும் அனுமன் வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.

சமநோக்கு நாள்.

7-ந் தேதி (சனி)

தென்திருப்பேரை பெருமாள் கோவிலில் ரத உற்சவம்.

திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் காலையில் அன்ன வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் புறப்பாடு.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் பாற்குடக் காட்சி, இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் ரிஷப சேவை.

திருக்குற்றாலம் குற்றாலநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் வீதி உலா.

உப்பிலியப்பன் கோவில் சீனி வாசப் பெருமாள் வெள்ளி திருப்பல்லக்கில் பவனி.

கீழ்நோக்கு நாள்.

8-ந் தேதி (ஞாயிறு)

திருக்குற்றாலம் குற்றாலநாதர் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா.

சமயபுரம் மாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.

பாபநாசம் சிவபெருமான் வெள்ளி விருட்ச சேவை.

ஒழுகைமங்கலம் மாரியம்மன் ரத உற்சவம்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் புஷ்ப சப்பரத்தில் தீர்த்தவாரி.

திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் பூந்தேரில் பவனி.

உப்பலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சூர்ணாபிஷேகம்.

கரிவலம்வந்த நல்லூர் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் உலா.

கீழ்நோக்கு நாள்.

9-ந் தேதி (திங்கள்)

திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் வடலூர் சப்பரத்திலும், இரவு தங்கக் குதிரையிலும் பவனி.

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கில் உலா, வெண்ணை தாழி சேவை, இரவு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், தாயார் அலங்கார படிச்சட்டத்திலும் பவனி.

சமயபுரம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.

மேல்நோக்கு நாள். 

Next Story