இந்த வார விசேஷங்கள்


இந்த வார விசேஷங்கள்
x
தினத்தந்தி 11 Dec 2018 10:59 AM GMT (Updated: 11 Dec 2018 10:59 AM GMT)

11-12-2018 முதல் 17-12-2018 வரை இந்த வார விசேஷங்கள் பற்றிய குறிப்புகள்...

11-ந் தேதி (செவ்வாய்)

சதுர்த்தி விரதம்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் ரத உற்சவம்.

ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ஆண்டாள் திருக்கோலம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் மற்றும் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கோதண்டராமர் திருக்கோலமாய் காட்சி தருதல்.

குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.

மேல்நோக்கு நாள்.

12-ந் தேதி (புதன்)

முகூர்த்த நாள்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்தம்.

காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆகிய தலங்களில் திருமொழி திருநாள் தொடக்கம்.

ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், காலிங்கநர்த்தன காட்சி.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கண்ணன் திருக்கோலமாய் காட்சி தருதல்.

மேல்நோக்கு நாள்.

13-ந் தேதி (வியாழன்)

முகூர்த்த நாள்.

சஷ்டி விரதம்.

ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பம், வெள்ளி சீவிகையில் சுவாமி பவனி.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், பரமபத நாதராய் திருக்காட்சி அருளல்.

திருமாலிருஞ்சோலை கள்ளழகர், காஞ்சி வரதராஜர் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.

ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

மேல்நோக்கு நாள்.

14-ந் தேதி (வெள்ளி)

முகூர்த்த நாள்.

வள்ளியூர் சுப்பிரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம்.

திருநெல்வேலி, திருச்செந்தூர், மதுரை, சிதம்பரம், சுசீந்திரம் ஆகிய தலங்களில் திருவாதிரை உற்சவம் ஆரம்பம்.

திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் யோகாம்பிகை வடிவமாய் திருக்காட்சி.

ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்சம்.

கும்பகோணம் சாரங்கபாணி, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமொழி திருநாள் தொடக்கம்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், வாகாசூரவதம் திருக்கோலமாய் காட்சி.

மேல்நோக்கு நாள்.

15-ந் தேதி (சனி)

ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் முதல் அமைச்சர் திருக்கோலமாய் காட்சி அளித்தல்.

சிதம்பரம் சிவபெருமான் காலை சந்திர பிரபையிலும், இரவு அன்ன வாகனத்திலும் பவனி.

ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் திருவீதி உலா.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் பகல் பத்து உற்சவ சேவை.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், பட்டாபிராமர் திருக்கோலக் காட்சி.

கீழ்நோக்கு நாள்.

16-ந் தேதி (ஞாயிறு)

மார்கழி மாத பூஜை ஆரம்பம்.

அனைத்து ஆலயங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம்.

ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் திரிபுர சம்ஹார லீலை, இரவு கயிலாச பர்வத வாகனத்தில் சுவாமி வீதி உலா.

ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கோவர்த்தன லீலை.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம், திருவரகுணமங்கை ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், முரளி கண்ணன் திருக்கோல காட்சி.

மேல்நோக்கு நாள்.

17-ந் தேதி (திங்கள்)

குற்றாலம் குற்றாலநாதர் ரிஷப வாகனத்தில் புறப்பாடு.

ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் மாலை முத்துக்குறி கண்டருளல்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நாச்சியார் திருக்கோலத்துடன் அர்ச்சுனன் மண்டபம் எழுந்தருளல்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், மோகன அவதாரம்.

சமநோக்கு நாள்.

Next Story