பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தை திருவிழா தொடங்கியது


பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தை திருவிழா தொடங்கியது
x
தினத்தந்தி 12 Jan 2019 11:15 PM GMT (Updated: 12 Jan 2019 11:15 PM GMT)

பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பூதப்பாண்டி,

பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்கசாமி-சிவகாமி அம்பாள் கோவிலில் தை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும். அதே போல் இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 21-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது.

நேற்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், அதன்பிறகு விநாயகருக்கும், பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 7.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. மணி நம்பியார், சிவசுப்பிரமணியம் நம்பியார், விக்னேஷ் நம்பியார் ஆகியோர் கோடியேற்றி வைத்து, தீபாராதனை காண்பித்தனர். அதைத்தொடர்ந்து சாமி-அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

இந்த விழாவில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, பூதப்பாண்டி தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஆறுமுகநயினார் பிள்ளை, ஸ்ரீகாரியம் சேதுராம், தோவாளை தாசில்தார் சொக்கலிங்கம்பிள்ளை, ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணகுமார், திருப்பணி மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அன்னதானம், இரவு மெல்லிசை நிகழ்ச்சி, சாமியும், அம்பாளும் வாகன பவனி ஆகியவையும் நடந்தது.

20-ந்தேதி காலை 8 மணிக்கு தேர்களில் விநாயகரையும், சாமியையும், அம்பாளையும் எழுந்தருள செய்து தேரோட்டம் நடக்கிறது. 21-ந்தேதி மாலை 6 மணிக்கு ஆறாட்டும், இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழாவும், நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ணம் போன்றவை நடைபெறுகிறது.

Next Story