இந்த வார விசேஷங்கள்


இந்த வார விசேஷங்கள்
x
தினத்தந்தி 23 April 2019 9:59 AM GMT (Updated: 23 April 2019 9:59 AM GMT)

23-4-2019 முதல் 29-4-2019 வரை இந்த வார விசேஷங்கள்

23-ந் தேதி (செவ்வாய்)

* வராக ஜெயந்தி.
* சென்னை சென்னகேசவப் பெருமாள்,
நாச்சியார் திருக்கோலமாய் காட்சியருளல், இரவு தங்கப் பல்லக்கில் பவனி.
* கோயம்புத்தூர் தண்டு மாரியம்மன் திருவீதி உலா.
* வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட
தங்கப் பூமாலை சூடியருளல்.
* சமநோக்கு நாள்.

24-ந் தேதி (புதன்)

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் இரவு
புண்ணிய கோடி விமானத்தில் பவனி.
* திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதியம்மன் இருவருக்கும்
திருமஞ்சன சேவை.
* வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு.
* செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் திருவீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.

25-ந் தேதி (வியாழன்)

* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.
* சென்னை சென்னகேசவப் பெருமாள் கோவில் ரதம்.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உற்சவம் தொடக்கம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் திருவீதி உலா.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.

26-ந் தேதி (வெள்ளி)

* முகூர்த்த நாள்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் 
வெண்ணெய்த் தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் பவனி.
* வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், நவசக்தி மண்டபம் எழுந்தருளி
பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை திருவீதி உலா.
* மேல்நோக்கு நாள்.

27-ந் தேதி (சனி)

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
* திருநெல்வேலி திருவேங்கடமுடையான் சன்னிதியில் ரத உற்சவம்.
* சென்னை சென்னகேசவப் பெருமாள் தங்கப் பல்லக்கிலும்,
புண்ணிய கோடி விமானத்திலும் பவனி.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் வீதி உலா.
* செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் புறப்பாடு கண்டருளல்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள்
இரவு கண்ணாடி பல்லக்கில் திருவீதி உலா.
* மேல்நோக்கு நாள்.

28-ந் தேதி (ஞாயிறு)

* சென்னை சென்னகேசவப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் பவனி.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் சப்தாவரணம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் திருமஞ்சன சேவை.
* வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.
* மேல்நோக்கு நாள்.

29-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் திருவிளையாடல்.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி சன்னிதியில் நான்கு கருட சேவை.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு.
* செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் பவனி வருதல்.
* மேல்நோக்கு நாள்.


Next Story