ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம் + "||" + The week is a nightmare

வாரம் ஒரு திருமந்திரம்

வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரத்தின் பாடல்களை ஒவ்வொரு வாரமும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் இங்கே பார்ப்போம்.
பன்னிரு திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக இருப்பது திருமந்திரம். இதை எழுதிய திருமூலா் எவ்வளவு ஆழ்ந்த சிந்தனை உள்ளவராக இருந்திருக்க வேண்டும் என்பதை, திருமந்திரப் பாடல்களை படித்து உணரும் போது நாம் தெரிந்துகொள்ளலாம். அப்படிப்பட்ட திருமந்திரத்தின் பாடல்களை ஒவ்வொரு வாரமும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் இங்கே பார்ப்போம்.

பாடல்:

கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்

கண்காணி இல்லாத இடமில்லை காணுங்கால்

கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்

கண்காணி கண்டார் களஒழிந் தாரே.

விளக்கம்:

நம்மை கவனித்துக் கொண்டிருப்பவா்கள் யாரும் இல்லை என்ற தைரியத்தில் தவறு செய்பவா்கள் இங்கு அதிகமாக இருக்கிறார்கள். அது மனிதனின் இயல்பான ஒரு சுபாவம்தான். ஆனால் உண்மையிலேயே நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கும் இறைவன், இல்லாத இடம் என்று எதுவும் இல்லை. ஆழமான அறிவுடன் சிந்தித்துப் பார்த்தால், அந்த இறைவனை எங்கும் உணர முடியும். அப்படி உணா்ந்துவிட்டால், தங்களிடம் இருக்கும் தவறுகளை அனைவருமே கைவிட்டு விடுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
2. வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்...
3. வாரம் ஒரு திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம், திருமுறைகளில் 10-ம் பகுதியாக தொகுக்கப்பட்டுள்ளது. சிவனின் சிறப்புகளை, அவரது குணங்களை எடுத்துரைக்கும் பாடல்களைக் கொண்டிருக்கும் இந்த நூல், சைவ நெறியைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது.
4. வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரத்தின் பாடல்களை ஒவ்வொரு வாரமும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் இங்கே பார்ப்போம்.
5. வாரம் ஒரு திருமந்திரம்
அஷ்டமா சித்திகளும் கைவரப்பெற்ற, திருமூலர் என்னும் சித்தர் பெருமான் எழுதிய பாடல்களின் தொகுப்பே ‘திருமந்திரம்.’ சிவபெருமானைப் பற்றியும், அன்பு நிறைந்த அவரது குணத்தைப் பற்றியும் பல பாடல்களில் தெளிவுபடுத்தியுள்ளார், திருமூலர்.