வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x
தினத்தந்தி 20 Nov 2021 5:34 AM GMT (Updated: 20 Nov 2021 5:34 AM GMT)

திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்...

மூவாயிரம் பாடல்களால் ஒப்பற்ற கருத்துக்களை கூறியிருக்கும் நூல், ‘திருமந்திரம்.’ திருமூலர், சிவபெருமானையும், சைவ நெறிகளையும் எந்தளவுக்கு உள்வாங்கிக்கொண்டு, அதனை தன் பாடல்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது வியப்புக்குரியது. அப்படிப்பட்ட திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்

நடுங்குவது இல்லை நமனும் அங்கு இல்லை

இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை

படும்பயன் இல்லை பற்றுவிட்டார்க்கே.

விளக்கம்:-

சிவபெருமானின் திருவடியை இறுக்கமாக பிடித்திருக்கும், உண்மையான பக்தர்களின் உள்ளம் எதற்கும் அஞ்சுவது கிடையாது. எமதர்மன் கூட அவர்களை ஒன்றும் செய்ய மாட்டான். துன்பமும், இரவும், பகலும் சிவனருள் பெற்றவர்களுக்கு இல்லை. இனி அடைய வேண்டும் என்ற எந்த பயன்களும் அவர்களுக்கு இருக்காது. பற்றுவிட்ட ஞானிகள், அனைத்தையும் பெற்றவராக இருப்பர்.

Next Story