வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x
தினத்தந்தி 25 Nov 2021 6:23 AM GMT (Updated: 25 Nov 2021 6:23 AM GMT)

திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

திருமந்திரம் என்னும், சைவ நெறி நூல் வாயிலாக, இறைவனை உணர்ந்துகொள்வது எப்படி என்பதைப் பற்றி, அழகாக எடுத்துரைத்திருக்கிறார், திருமூலர். அந்த இனிமை பொருந்திய திருமந்திரப் பாடல்களை, வாரம் ஒன்றாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு திருமந்திரப் பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்..

பாடல்:-

நான் அறிந்து அன்றே இருக்கின்ற ஈசனை

வான் அறிந்தார் அறியாது மயங்கினர்

ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்

தான் அறியான் பின்னை யார் அறிவாரே.

விளக்கம்:-

வினைகள் அனைத்தும் தீர்ந்த நிலையில், அக்கணமே சிவபெருமானை அறிந்து கொண்டேன்.

தேவர்கள் கூட, வான் உலக இன்பங்களையே தெரிந்து வைத்திருந்தார்களே அன்றி, சிவனை முழுமையாக அறிந்துகொண்ட இன்பத்தைப் பெறவில்லை. உடம்பினுள் பொருந்திய உயிரின் உறவாய் விளங்கும் ஒளிமிகு சுடராகிய ஈசனை, மெய்யடியார்கள் அறியவில்லை எனில், வேறு யார் அறிவார்.

Next Story