இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

முன்னோர்கள் வழிபாட்டால் முன்னேற்றம் காண வேண்டிய நாள்.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 25-ந்தேதி திங்கட்கிழமை.

திதி: அமாவாசை திதி இரவு(12.27)க்கு மேல் பிரதமை திதி.

நட்சத்திரம்: உத்திரட்டாதி நட்சத்திரம் காலை (9.56)க்கு மேல் ரேவதி நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம். மேல்நோக்குநாள்

சூலம்: கிழக்கு

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

நல்லநேரம்: காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்:

முன்னோர்கள் வழிபாட்டால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். மன்னார்குடி ராஜகோபால சுவாமி காளிங்க நர்த்தனம். சமயபுரம் மாரியம்மன் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் மலர்ப்பாவாடை தரிசனம்.

ராசிப்பலன்:

மேஷம்

உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். உறவினர் பகை மாறும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வீர்கள்.

ரிஷபம்

பக்கபலமாக இருப்பவர்களால் சிக்கல்கள் தீரும் நாள். நிதி நிலை உயரும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தனவரவு தாராளமாக வந்து சேரும்.

மிதுனம்

சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. தொழில் மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

கடகம்

லாபகரமான நாள். தொழில் போட்டிகள் அகலும். செல்வாக்கு மேலோங்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.

சிம்மம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். ஆரோக்கியத் தொல்லை உண்டு.

கன்னி

எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர் உங்களுக்கு உதவி கரமாக இருப்பர்.

துலாம்

வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழிலில் புதிய முயற்சிகள் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள்.

விருச்சிகம்

தடைகள் விலகும் நாள். தனலாபம் வந்து சேரும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும்.

தனுசு

உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் உண்டு.

மகரம்

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.

கும்பம்

சுபச்செய்தி வந்து சேரும் நாள். பிறர் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டதற்கு ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

மீனம்

வளர்ச்சி கூடும் நாள். வாகன யோகம் உண்டு. உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும். தொலை தூரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சியைத் தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


Next Story