இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

மதுரை மீனாட்சி-சொக்கநாதர் தேரோட்டம்.

சென்னை,

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் சித்திரை மாதம் 9-ந்தேதி திங்கட்கிழமை.

திதி: சதுர்த்தசி திதி இரவு (4.18)க்கு மேல் பவுர்ணமி திதி .

நட்சத்திரம்: அஸ்தம் நட்சத்திரம் இரவு (8.48)க்கு மேல் சித்திரை நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம். சமநோக்குநாள். முகூர்த்தநாள்

சூலம்: கிழக்கு

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

நல்லநேரம்: காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

திருமாலிருஞ்சோலை கள்ளழகர், கள்ளர் திருகோலம்-எதிர்சேவை. மதுரை மீனாட்சி-சொக்கநாதர் தேரோட்டம்.

இன்றைய ராசிபலன்:

மேஷம்

எதிரிகள் விலகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்புக் கிட்டும். தொழில் ரீதியான பயணங்கள் உண்டு. மாற்று வைத்தியத்தால் உடல் நலம் சீராகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்.

ரிஷபம்

யோகமான நாள். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட தொல்லை மாறும். மங்கலச் செய்தியொன்று வந்து சேரலாம்.

மிதுனம்

முன்னேற்றம் காண முக்கிய முடிவெடுக்கும் நாள். உத்தியோகத்தில் பணிச்சுமை காரணமாக பழைய உத்தியோகத்தில் சேரலாமா என்ற சிந்தனை உருவாகும். வரன்கள் வாயில் தேடி வரும்.

கடகம்

போட்டிகளைச் சமாளிக்க வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். சுணங்கிய காரியமொன்று சுறுசுறுப்பாக நடைபெறும். பஞ்சாயத்துகள் சாதகமாகும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

சிம்மம்

குடும்பச்சுமை கூடும் நாள். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்ள நேரிடும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லையுண்டு.

கன்னி

பிரச்சினைகள் தீரும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இதுவரை சந்திக்காதவர்களைச் சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வரவு திருப்தி தரும்.

துலாம்

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணிச்சுமை காரணமாக உத்தியோகத்திலிருந்து விடுபடலாம் என்று சிந்திப்பீர்கள், விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள்.

விருச்சிகம்

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். உதிரி வருமானங்கள் உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுது ணை புரியும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

தனுசு

பாசமிக்க உறவினர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். பல நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறலாம். தொழில் முயற்சிகளில் ஏற்பட்ட தடுமாற்றம் அகலும். நீண்ட நாளையப் பிரார்த்தனை நிறைவேறும்.

மகரம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள், நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளத் திட்டமிடுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. மாலை நேரம் மகிழ்ச்சியான தகவல் உண்டு.

கும்பம்

பேச்சிலும், செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் உறவினர் பகை ஏற்படாமல் இருக்கும். விரும்பிய பயணம் விலகிப் போகலாம். தொழிலில் குறுக்கீடுகள் வரலாம்.

மீனம்

எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நடைபெறும் நாள். சுபச்செய்திகள் இல்லம் தேடி வந்து சேரும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

சந்திராஷ்டமம்: கும்பம்


Next Story