முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 233 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து


முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 233 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து
x

Image Courtesy: AFP

முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு நியூசிலாந்து அணி 233 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

கெய்ர்ன்ஸ்,

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அத்தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவின் கெய்ர்ன்ஸில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கப்தில் மற்றும் கான்வே களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 10 ரன்களாக இருந்த போது மிகவும் நிதானமாக ஆடிய கப்தில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து கான்வேயுடன் கேப்டன் கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். இந்த ஜோடி மிகவும் பொறுமையாக ஆடினர். இந்நிலையில் அணியின் ஸ்கோர் 91 ரன்களாக இருந்த போது கான்வே 46 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்தனர். அடுத்து விக்கெட் கீப்பர் டாம் லதாம் களம் இறங்கினார்.

பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் நியூசிலாந்து அணி தடுமாறியது. அந்த அணியின் வில்லியம்சன் ( 45 ரன்), டாம் லதாம் ( 43 ரன்), டேரில் மிட்செல் ( 26 ரன்) எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் நியூசிலாந்து அனி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக கான்வே 46 ரன்னும், வில்லியம்சன் 45 ரன்னும், லதாம் 43 ரன்னும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் 4 விக்கெட்டும், ஹேஸ்லேவுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க், ஆடம் ஜாம்பா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதயடுத்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆட உள்ளது.


Next Story