கிரிக்கெட்

தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு சென்னையில் நடக்கிறது + "||" + The selection of players for the 20th Cricket World Cup in Tamil Nadu will be held in Chennai

தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு சென்னையில் நடக்கிறது

தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு சென்னையில் நடக்கிறது
தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு சென்னையில் இன்று நடக்கிறது.
சென்னை,

கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான 3-வது தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 11-ந் தேதி தொடங்குகிறது.


இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பேந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

3-வது சீசனுக்கான வீரர்கள் தேர்வு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இந்த போட்டிக்காக மொத்தம் 772 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் இருந்து 8 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும். வீரர்கள் தேர்வு நிகழ்ச்சியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எல்.சிவராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.

ஒவ்வொரு அணியும் ஏற்கனவே 3 வீரர்களை தக்க வைத்து இருக்கின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி எஸ்.கார்த்திக், ஆர்.அலெக்சாண்டர், சசிதேவ் ஆகிய வீரர்களை தக்க வைத்துள்ளது. ஒவ்வொரு அணியும் தலா 18 முதல் 19 வீரர்களை எடுக்கலாம். அவர்களில் 2 பேர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களாகவும், மூன்று பேர் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களாகவும் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

வீரர்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ஏ’ பிரிவு வீரர்களின் விலை ரூ.5 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.3 லட்சம் எனவும், ‘பி’ பிரிவு வீரர்களின் விலை ரூ.2½ லட்சம், ரூ.2 லட்சம், ரூ.1½ லட்சம் எனவும், ‘சி’ பிரிவு வீரர்களின் விலை ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாடு, புதுச்சேரிக்கு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர்கள் நியமனம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
2. சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தாவிட்டால் அ.தி.மு.க. ஆட்சி கவிழும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் அ.தி.மு.க. ஆட்சி கவிழும் என்று சேலத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
3. மழை பொய்த்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் : தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறை
தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையாக பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.
4. தமிழ்நாட்டை காக்கும் சக்தியாக பா.ம.க. மட்டுமே உள்ளது - வாலாஜா பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாட்டை காக்கும் சக்தியாக பா.ம.க.மட்டுமே உள்ளது என வாலாஜாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
5. தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.