கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசார் அலி சர்வதேசப் போட்டிகளிலிருந்து திடீர் ஓய்வு + "||" + Pakistan batsman Azhar Ali retires from one-day cricket

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசார் அலி சர்வதேசப் போட்டிகளிலிருந்து திடீர் ஓய்வு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்  அசார் அலி சர்வதேசப் போட்டிகளிலிருந்து திடீர் ஓய்வு
பாகிஸ்தான் கேப்டனாக சில காலம் இருந்த அசார் அலி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்தார்.
இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் கேப்டனாக சில காலம் இருந்த அசார் அலி  டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்துவதற்காக  ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்தார்.  இவரிடம் இன்னொரு ஆச்சரியம் 20  ஓவர் சர்வதேச போட்டிகளில் 

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை வீழ்த்திய இறுதிப் போட்டியில் அசார் அலி முக்கியமான 59 ரன்களை எடுத்தார். இதே சாம்பியன்ஸ் டிராபி லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக 50 ரன்களையும், இங்கிலாந்துக்கு எதிராக 76 ரன்களையும் எடுத்தார் அசார் அலி.

இந்த ஆண்டு நியூசிலாந்து தொடருக்குப் பிறகே அசார் அலி அணியிலிருந்து நீக்கப்பட்டு இவருக்குப் பதிலாக இமாம் உல் ஹக் சேர்க்கப்பட்டார்.

“நான் திடீரெனத்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன், டெஸ்ட் கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்த விரும்புகிறேன். பாகிஸ்தான் அணியில் ஒருநாள் போட்டிகளுக்கு அபாரமான வீரர்கள் ஆடி வருகின்றனர், ஆகவே என் தேவை இருக்காது.

ஆனால் நான் எந்த ஒரு கசப்பான எண்ணங்களுடனும் ஓய்வு அறிவிக்கவில்லை. இது என் சொந்த முடிவு, டெஸ்ட் போட்டிகளில் இதே ஆற்றல், திறமையுடன் தொடர்ந்து கவனம் செலுத்த விரும்புகிறேன்.

அடுத்த உலகக்கோப்பை மற்றும் வரவிருக்கும் தொடர்களுக்காக பாகிஸ்தான் அணி வெற்றி பெற ஒரு முன்னாள் கேப்டனாக வாழ்த்துகிறேன். சர்பராஸ் அகமட் அணியை நன்றாகவே வழிநடத்துகிறார்.” என்றார்.

இதுவரை 53 போட்டிகள் ஆடிய அசார் அலி, 1845 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 36.90. இதில் 3 சதங்கள் 12 அரைசதங்கள் அடங்கும்.

இவரது கேப்டன்சியில் பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு எதிராக 3-0 என்று உதை வாங்கியது, அதன் பிறகே ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் 9-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தலீபான் தளபதி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி
பாகிஸ்தானில் காஜி பம்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
2. சாதனைகளின் தலைவன் விராட் கோலி -முன்னாள் ஜாம்பவான்கள் பாராட்டு
சாதனைகளின் தலைவன் விராட் கோலி என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டி உள்ளனர்.
3. ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது வீரர் மகேந்திர சிங் டோனி என்ற பெருமையை பெற்றார்.
4. இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள்
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
5. நவாஸ் ஷெரீப் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது: மகள் மர்யம் நவாஸ்
நவாஸ் ஷெரீப் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவரைக்காண சிறைநிர்வாகம் அனுமதி மறுப்பதாகவும் மர்யம் நவாஸ் தெரிவித்துள்ளார்.