கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்கு குடும்பத்துடன் செல்லும் இந்திய வீரர்களால் பிசிசிஐக்கு தலைவலி


கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்கு குடும்பத்துடன் செல்லும் இந்திய  வீரர்களால் பிசிசிஐக்கு தலைவலி
x
தினத்தந்தி 1 Feb 2019 6:43 AM GMT (Updated: 1 Feb 2019 6:43 AM GMT)

கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்கு குடும்பத்துடன் செல்லும் இந்திய வீரர்களால் பிசிசிஐக்கு பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது,  முதல் 10 நாட்கள் வீரர்களுடன் அவர்களின் மனைவி இருக்க பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.  இதன்படி,  இந்திய கிரிக்கெட் வீரர்களில் சிலர் வெளிநாட்டு போட்டிகளுக்கு செல்லும் போது தங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் செல்கின்றனர். ஆனால் வீரர்கள் குடும்பத்துடன் வெளிநாட்டு போட்டிகளுக்கு வருவது நடைமுறை சிக்கல்களை உண்டாக்குவதாக பிசிசிஐ வருத்தம் தெரிவித்துள்ளது

இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பிசிசிஐ பல சிக்கல்களை சந்தித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அனைவருக்கும் பாதுகாப்பு அளித்தல், பேருந்து வசதி ஏற்படுத்துதல், தங்கும் இடம், உணவு வசதிகள் என அனைத்து வகையிலும் பிசிசிஐக்கு நடைமுறை சிக்கல்கள் உண்டானதாக கூறப்படுகிறது. இரண்டு பேருந்துகள் பயன்படுத்திய நிலையிலும் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை குறிப்பிட்டு பிசிசிஐ தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. வீரர்களுடன் வருபவர்களுக்கு மைதானத்தில் பாதுகாப்பான இடம் கொடுப்பது கூட பிரச்சினை தான் என்றும் இந்த விவகாரத்தில் தாங்கள் பணத்தை முன்னிறுத்தவில்லை எனவும்  பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது

Next Story