வங்காளதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: நியூசிலாந்து அணி 451 ரன்கள் குவிப்பு


வங்காளதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: நியூசிலாந்து அணி 451 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 1 March 2019 10:30 PM GMT (Updated: 1 March 2019 7:25 PM GMT)

வங்காளதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி 451 ரன்கள் குவித்தது.

ஹாமில்டன்,

வங்காளதேசம் - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 234 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து தொடக்க நாளில் விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். ஜீத் ராவலும், டாம் லாதமும் முதல் விக்கெட்டுக்கு 254 ரன்கள் திரட்டினர். 1972-ம் ஆண்டுக்கு பிறகு அதிக ரன்கள் சேர்த்த நியூசிலாந்து தொடக்க ஜோடி என்ற சிறப்பை இவர்கள் பெற்றனர். தனது ‘கன்னி’ சதத்தை எட்டிய ஜீத் ராவல் 132 ரன்களிலும், 9-வது சதத்தை நிறைவு செய்த டாம் லாதம் 161 ரன்களிலும் கேட்ச் ஆனார்கள். தொடர்ந்து ராஸ் டெய்லர் 4 ரன்னிலும், ஹென்றி நிகோல்ஸ் 53 ரன்னிலும் வெளியேறினர். ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 451 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் வில்லியம்சன் 93 ரன்னுடனும், நீல் வாக்னெர் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Next Story