கிரிக்கெட்

இளையோர் உலக கோப்பை கிரிக்கெட் அணி அறிவிப்பு + "||" + Junior World Cup Cricket Team announced

இளையோர் உலக கோப்பை கிரிக்கெட் அணி அறிவிப்பு

இளையோர் உலக கோப்பை கிரிக்கெட் அணி அறிவிப்பு
இளையோர் உலக கோப்பை கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ. அறிவித்து உள்ளது.
புதுடெல்லி,

19 வயதுக்கு உட்பட்டோர் விளையாடும் இளையோர் உலக கோப்பை கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்து உள்ளது.

இதன்படி, இந்திய அணியின் கேப்டனாக பிரியம் கார்க், துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக துருவ் சந்த் ஜூரெல் செயல்படுவர்.

அணியின் மற்ற வீரர்கள் விவரம்:-

யஷாஷ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, திவ்யான்ஷ் சக்சேனா, ஷாஷ்வத் ராவத், திவ்யான்ஷ் ஜோஷி, சுபாங்க் ஹெக்டே, ரவி பிஷ்னோய், ஆகாஷ் சிங், கார்த்திக் தியாகி, அதர்வா அங்கோலேகர், குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), சுஷாந்த் மிஷ்ரா, வித்யாதர் பாட்டீல் ஆகியோர் உள்ளனர்.