கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமிக்கு பாகிஸ்தான் குடியுரிமை + "||" + Ex-West Indies skipper Darren Sammy to receive honorary Pakistan citizenship

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமிக்கு பாகிஸ்தான் குடியுரிமை

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமிக்கு பாகிஸ்தான் குடியுரிமை
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமிக்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
லாகூர்,

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி 2016-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். அந்த போட்டிக்கான பெஷாவர் ஜால்மி அணியின் கேப்டனாக இருந்து வரும் டேரன் சேமி தலைமையில் அந்த அணி 2017-ம் ஆண்டில் கோப்பையை கைப்பற்றியது. பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று வெளிநாட்டு வீரர்கள் விளையாட தயங்கும் நிலையில் டேரன் சேமி தொடர்ந்து அங்கு விளையாடுவது பிற நாட்டு வீரர்களும் பாகிஸ்தான் செல்ல ஊக்கம் அளிப்பதாக அந்த நாடு கருதுகிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு சார்பில் டேரன் சேமிக்கு கவுரவ குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் மார்ச் 23-ந் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி, டேரன் சேமிக்கு கவுரவ குடியுரிமைக்கான சான்றிதழை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்புகிறது
குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்தது.
2. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து காயம் காரணமாக தவான் விலகல் - சஞ்சு சாம்சன் சேர்ப்பு
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
3. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி வெற்றி
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஒரு ரன்னில் தோல்வி
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.