பெண்கள் டி 20 அரையிறுதி ; இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஆட்டம் மழையால் தாமதம்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 5 March 2020 3:49 AM GMT (Updated: 5 March 2020 3:49 AM GMT)

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி மழையால் தாமதம் ஆகியுள்ளது.

சிட்னி,

10 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணியும் பி பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக போட்டி தாமதம் ஆகியுள்ளது. சிட்னியில் கனமழை பெய்து வருகிறது. ஒருவேளை போட்டி கைவிடும் பட்சத்தில், ஏ பிரிவில் முதலிடம் வகிக்கும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 


Next Story