3 ஆண்டுகள் தடையை எதிர்த்து பாக்.வீரர் உமர் அக்மல் மேல் முறையீடு


3 ஆண்டுகள் தடையை எதிர்த்து பாக்.வீரர் உமர் அக்மல் மேல் முறையீடு
x
தினத்தந்தி 20 May 2020 4:31 AM GMT (Updated: 20 May 2020 4:31 AM GMT)

3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மேல் முறையீடு செய்துள்ளார்.

லண்டன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் 29 வயதான உமர் அக்மல், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட தன்னை அணுகிய சந்தேக நபர் குறித்து கிரிக்கெட் வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மறைத்தது சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து அவர் மீது இரண்டு பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து விசாரித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் பைசல் இ மிரான் சவுகான், உமர் அக்மலுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 3 ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டார்.  இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து அக்மல் மேல் முறையீடு செய்துள்ளார். உமர் அக்மல் மேல் முறையீடு செய்துள்ளதை உறுதி செய்துள்ள பாகிஸ்தான் கிர்க்கெட் நிர்வாக குழு,  இந்த விவகாரத்தை சுதந்திரமாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

Next Story