கிரிக்கெட்

ஐ.பி.எல். கொரோனா சோதனைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு + "||" + IPL An allocation of Rs 10 crore for corona testing

ஐ.பி.எல். கொரோனா சோதனைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

ஐ.பி.எல். கொரோனா சோதனைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
ஐ.பி.எல். கொரோனா சோதனைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துபாய்,

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று ஐக்கிய அமீரக கிரிக்கெட் வாரியத்துடன், இந்திய கிரிக்கெட் வாரியம் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகிறது.


வீரர்கள், பயிற்சியாளர், உதவியாளர்கள், அணி நிர்வாகிகள், ஓட்டல் ஊழியர், மைதான ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கடந்த 20-ந்தேதியில் தொடங்கி போட்டி முடிவடையும் காலம் வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகளை செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு உள்ளதாகவும், ஒவ்வொரு பரிசோதனைக்கும் வரிப்பிடித்தம் இல்லாமல் உள்ளூர் மதிப்புப்படி (அமீரகம்) ஏறக்குறைய ரூ.4 ஆயிரம் செலவு ஆவதாகவும் ஐ.பி.எல். மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

‘கொரோனா சோதனைக்காக மட்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் மொத்தம் ரூ.10 கோடி செலவிடுகிறது. குறிப்பிட்ட நிறுவனத்தை சேர்ந்த கிட்டத்தட்ட 75 மருத்துவ பணியாளர்கள் இந்த பரிசோதனை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வீரர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளமாட்டோம்’ என்றும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தை சேர்ந்த 8 பேர் உள்பட ஐ.பி.எல். ஏலத்துக்கான இறுதி பட்டியலில் 292 வீரர்கள்
ஐ.பி.எல். ஏலத்துக்கான இறுதி பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் உள்பட மொத்தம் 292 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
2. ஐ.பி.எல். போட்டிகளின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரிப்பு
ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் தொடரின் பார்வையாளர்கள் எண்ணிக்கை இந்த வருடம் 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியை பந்தாடியது ஐதராபாத் வார்னர், சஹா அரைசதம் விளாசினர்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி, டெல்லியை பந்தாடியது. வார்னர், சஹா அரைசதம் விளாசினர்.
4. ஐ.பி.எல். போட்டியில் விளையாட வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூருக்கு அனுமதி மறுப்பு
ஐ.பி.எல். போட்டியில் விளையாட வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூருக்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது.