வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணி ஆறுதல் வெற்றி


வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணி ஆறுதல் வெற்றி
x
தினத்தந்தி 28 May 2021 9:21 PM GMT (Updated: 2021-05-29T02:51:14+05:30)

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

டாக்கா,

இலங்கை-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 286 ரன்கள் குவித்தது. தனது 6-வது சதத்தை பூர்த்தி செய்த கேப்டன் குசல் பெரேரா 120 ரன்கள் (122 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். 

தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 42.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா 9 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இலங்கைக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை வங்காளதேசம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

Next Story