ரஷித் கான் ஏன் தக்கவைக்கப்படவில்லை? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளக்கம்


ரஷித் கான் ஏன் தக்கவைக்கப்படவில்லை? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளக்கம்
x
தினத்தந்தி 1 Dec 2021 1:40 PM GMT (Updated: 1 Dec 2021 1:40 PM GMT)

ரஷித் கான் ஏன் தக்கவைக்கப்படவில்லை என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.


சென்னை,

ஐ.பி.எல். 2022 ஆம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது. அதற்காக அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள முடியும்.

இந்நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் எந்தெந்த அணிகளில் யார் யார் தக்கவைப்பு என்பது குறித்த பட்டியல் நேற்று  வெளியானது . 

அதன்படி  சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணி கேன் வில்லியம்சன் ,அப்துல் சமத் ,உம்ரன் மாலிக் ஆகியோரை தக்கவைத்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் தக்கவைக்கப்படவில்லை.

ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததால் ரஷித் கான்  தக்கவைக்கப்படவில்லை.என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது .

இதுகுறித்து விளக்கமளித்துள்ள  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தலைமை செயல்  அதிகாரி கே ஷம்மி கூறுகையில்;
 
இது கடினமான முடிவு, ஆனால்  ஒரு வீரர் ஏலத்தில் இருக்க விரும்பினால், அவருடைய விருப்பத்தை நாங்கள் கண்டிப்பாக மதிக்கிறோம்.  ஏலத்தில் சரியான விலையில் அவரை எடுக்க முடியுமா என்று பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார் ..

Next Story