இந்திய'ஏ' அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க 'ஏ' அணி வலுவான முன்னிலை


இந்தியஏ அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க ஏ  அணி வலுவான முன்னிலை
x
தினத்தந்தி 9 Dec 2021 3:49 AM GMT (Updated: 9 Dec 2021 3:49 AM GMT)

தென்னாபிரிக்க அணி 3-வது நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்துள்ளது

ப்ளூம்போண்டைன் ,

இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்போண்டைனில் நடைபெறும் டெஸ்ட்  தொடரில் தென்னாப்பிரிக்கா ஏ அணியுடன் விளையாடி வருகிறது . மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 9 ஆம் தேதி முடிவடைகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 6 ஆம் தேதி  தொடங்கியது. டாஸ் வென்ற  தென்னாப்பிரிக்கா ஏ அணியின்  கேப்டன்  பீட்டர் மலன் பேட்டிங்யை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய சரேல் ஏர்வி 75 ரன்கள் குவித்து நவ்தீப் சைனி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் டோனி சோர்சி 58 ரன்களிலும் , காயா சோண்டோ 56 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்கா  ஏ அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்சில் 268 ரன்களுக்கு சுருண்டது.இந்திய அணி தரப்பில் தீபக் சாகர் 4 விக்கெட்களையும் , நவ்தீப் சைனி 3 விக்கெட்களையும் , சவுரப் குமார் 2 விக்கெட்களையும்  கைப்பற்றினர். 

 இதை தொடர்ந்து முதல் இன்னிங்க்சை ஆட தொடங்கிய இந்திய அணி சற்று தடுமாறியது. தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி சா  5 ரன்னிலும் அபிமன்யு ஈஸ்வரன் 28 ரன்களிலும்  ஆட்டமிழந்தனர். இதன் பிறகு களமிறங்கிய படிக்கல்  8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹனுமா விஹாரி - இஷான் கிஷன் இணை சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது.

சிறப்பாக விளையாடிய ஹனுமா விஹாரி  63 ரன்களிலும் , இஷான் கிஷன் 91 ரன்களிலும்  ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 276 ரன்கள் குவித்தது.

8 ரன்கள் பின்தங்கிய நிலையில் நேற்று இரண்டாவது இன்னிங்சை விளையாடிய தென்னாபிரிக்க அணி 3 வது நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்ததுள்ளது. இதன் மூலம் தென்னாபிரிக்க அணி , இந்தியா அணியை விட 188 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

அந்த அணியின் சரேல் ஏர்வி 85 ரன்களிலும் , ஹம்சா 78 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர் .நான்காவது நாள் ஆட்டம் இன்று பிற்பகல் தொடங்குகிறது. 


Next Story