விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி


விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி
x
தினத்தந்தி 9 Dec 2021 11:22 AM GMT (Updated: 9 Dec 2021 11:22 AM GMT)

இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு -கர்நாடகா அணிகள் மோதின.


திருவனந்தபுரம், 

20-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் மும்பை, கவுகாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் உள்பட 7 நகரங்களில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் எலைட் ஏ, பி, சி, டி, இ ஆகிய பிரிவுகளில் முதலிடம் பிடிக்கும் 5 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும். 

இந்த போட்டி தொடரில்  இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு -கர்நாடகா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடக அணி தமிழக அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது .

இதனால் கர்நாடக அணி 36.3 ஓவர்களில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது . தமிழக அணியில் அதிகபட்சமாக சித்தார்த் 4 விக்கெட்டும் ,சாய் கிஷோர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 123 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி 28 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 123 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது  .


Next Story