பிரபல கிரிக்கெட் வீரருக்கு எதிராக பந்துவீச நான் பயந்துள்ளேன்-வஹாப் ரியாஸ்


பிரபல கிரிக்கெட் வீரருக்கு எதிராக பந்துவீச நான் பயந்துள்ளேன்-வஹாப் ரியாஸ்
x
தினத்தந்தி 16 Dec 2021 2:14 PM GMT (Updated: 16 Dec 2021 2:14 PM GMT)

வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ் யாருக்கு பந்துவீசுவது கடினம் என்று கூறியுள்ளார்.

இலங்கை ,

தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ் யாருக்கு பந்துவீசுவது கடினம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தன்னைப் பொறுத்தவரை தற்போது இருக்கும் பேட்ஸ்மேன்களில் ரோகித் சர்மா, பாபர் அசாம் ஆகியோர் சிறந்த வீரர்கள். இவர்களுக்கு எதிராக பந்து வீசுவது கடினம்.

ஆனாலும் தான் பந்து வீசிய காலத்தில், நான் பந்து வீச பயந்த வீரர் என்றால் அது தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தான், அவர் தான் நான் பந்து வீச வரும் போதே நான் எப்படி பந்து வீசப் போகிறேன் என்பதை அறியும் திறன் கொண்டவர். நான் எப்போதெல்லாம் அவருக்கு எதிராக பந்துவீசி இருக்கிறேனோ அப்போதெல்லாம் அவர் சிறப்பாகவே விளையாடி வந்துள்ளதாக தெரிவித்தார்.

Next Story