விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்; அரைஇறுதிக்கு தகுதி பெற்றது இமாசலபிரதேசம்


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்; அரைஇறுதிக்கு தகுதி பெற்றது இமாசலபிரதேசம்
x
தினத்தந்தி 21 Dec 2021 2:31 PM GMT (Updated: 21 Dec 2021 2:31 PM GMT)

இமாசலபிரதேச அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இமாசலபிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் அணிகள் களம் கண்டன. 

இப்போட்டியில் இமாசலபிரதேச அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த  உத்தரபிரதேச அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரிங்கு சிங் 76 ரன்களும், புவனேஷ்வர் குமார் 46 ரன்களும் எடுத்தனர்.

இமாசலபிரதேச அணி தரப்பில் வினய் கலேட்டியா 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், சித்தார்த் சர்மா 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இமாசலபிரதேச அணி 27 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.அந்த அணியில் அதிகபட்சமாக பிரஷாந்த் சோப்ரா 99 ரன்களும், நிகில் கங்க்டா 58 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.

உத்தரபிரதேச அணி தரப்பில் ஷிவம் மாவி 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம், இமாசலபிரதேச அணி அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.முன்னதாக நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றது.

Next Story