விஜய் ஹசாரே கோப்பை : இறுதி ஆட்டத்தில் தமிழகம்-இமாசலபிரதேச அணிகள் இன்று மோதல்


விஜய் ஹசாரே கோப்பை : இறுதி ஆட்டத்தில் தமிழகம்-இமாசலபிரதேச அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 25 Dec 2021 8:09 PM GMT (Updated: 25 Dec 2021 8:09 PM GMT)

இறுதிஆட்டத்தில் விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணி, இமாசலபிரதேசத்தை எதிர்கொள்கிறது.

ஜெய்ப்பூர்,

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று (காலை 9 மணி) நடக்கும் இறுதிஆட்டத்தில் விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணி, இமாசலபிரதேசத்தை எதிர்கொள்கிறது. 5 முறை சாம்பியனான தமிழக அணியில் ஜெகதீசன், தினேஷ் கார்த்திக், ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், பாபா சகோதரர்கள் என்று நட்சத்திர வீரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். 

இதனால் தமிழக அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக தென்படுகிறது. அதே சமயம் முதல்முறையாக இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ள ரிஷி தவான் தலைமையிலான இமாசலபிரதேசத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.

 பேட்டிங்கில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்த பிரசாந்த் சோப்ரா மற்றும் ஆல்-ரவுண்டரான கேப்டன் ரிஷி தவான் (416 ரன் மற்றும் 14 விக்கெட்) ஆகியோர் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.

Next Story