கோலிக்கு டிராவிட் புகழாரம்..!


கோலிக்கு டிராவிட் புகழாரம்..!
x
தினத்தந்தி 25 Dec 2021 10:03 PM GMT (Updated: 25 Dec 2021 10:03 PM GMT)

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒரு அணியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து முன்னேற்றம் காண விரும்புகிறோம். இதில் கேப்டன் விராட் கோலியின் பங்களிப்பு முக்கியமானது. ஒரு வீரராகவும், கேப்டனாகவும் அற்புதமாக செயல்படுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கும் வீரர்களில் அவரும் ஒருவர். இந்த தொடர் அவருக்கு சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இதன் மூலம் அணிக்கும் பலன் கிடைக்கும்’ என்றார்.

இந்திய ஒரு நாள் போட்டி அணிக்கான கேப்டன்ஷிப் மாற்றம் குறித்து கேட்கிறீர்கள். இது தேர்வாளர்களின் முடிவை பொறுத்தது. இந்த விவகாரத்தில் நான் என்ன விவாதித்து இருந்தாலும் அதை ஊடகத்தினரிடம் பகிர்ந்து கொள்ளமாட்டேன்’ என்றார்.

Next Story