6 ரன்களில் புதிய சாதனை படைக்க இருக்கும் விராட் கோலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 Feb 2022 10:30 AM GMT (Updated: 4 Feb 2022 10:30 AM GMT)

உள்ளூரில் நடைபெறும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.

அகமதாபாத்,

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 6-ஆம் தேதி ஆமதாபாத்தில் நடைபெற உள்ளது. 

இந்த தொடரில் விராட் கோலி விளையாடுவதன் மூலம் கோலி புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார். அதாவது கோலி இன்னும் 6 ரன்கள் அடித்தால், உள்ளூரில் நடைபெறும் சர்வதேச ஒருநாள் தொடரில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை பெற உள்ளார்.

இதற்கு முன்பு இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கள் படைத்துள்ளார். சச்சின் இந்த சாதனையை தனது 121-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக படைத்தார். 

விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 ரன்களை அடிப்பதன் மூலம் 96-வது இன்னிங்சில் இந்த சாதனையை அடைய முடியும்.


Next Story