கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த ருதுராஜ் கெய்க்வாட்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 Feb 2022 1:22 PM GMT (Updated: 10 Feb 2022 1:22 PM GMT)

கொரோனா தொற்றுக்கு ஆளான இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், தொற்றில் இருந்து குணமடைந்தார்.

அகமதாபாத்,

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக முன்னதாக ஆமதாபாத் வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இந்திய அணி வீரர்கள் தவான் , கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனால் இவர்களால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் பங்கேற்க முடியாத நிலை உருவானது. கொரோனா பாதிப்புக்கு ஆளான தவன் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் ஏற்கெனவே குணமடைந்துவிட்டனர். இந்த நிலையில், தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டும் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டார்.


Next Story