வார்னர்-வில்லியம்சனை சகோதரர்களாக மாற்றிய ஐ.பி.எல்..! பிரியாவிடை கொடுத்த வார்னர்..!


வார்னர்-வில்லியம்சனை சகோதரர்களாக மாற்றிய ஐ.பி.எல்..! பிரியாவிடை கொடுத்த வார்னர்..!
x
தினத்தந்தி 17 Feb 2022 9:05 PM IST (Updated: 17 Feb 2022 9:05 PM IST)
t-max-icont-min-icon

வில்லியம்சனுடன் இருக்கும் புகைப்படத்தை வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மெல்போர்ன்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனும் இணைந்து சில ஆண்டுகள் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடினர். வில்லியம்சன் அந்த அணியில் தக்கவைக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட வார்னர் 15-வது ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். 

இந்த நிலையில் வார்னர், வில்லியம்சனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ‘இனி வில்லியம்சனுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிடும் வாய்ப்பை இழக்கிறேன். உங்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதையும் தவற விடுகிறேன் சகோதரா’ என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story