தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்ட கிளென் மேக்ஸ்வெல்!


image courtesy: Instagram
x
image courtesy: Instagram
தினத்தந்தி 19 March 2022 12:13 PM GMT (Updated: 19 March 2022 12:13 PM GMT)

ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தனது நீண்ட நாள் காதலியான வினி ராமனை திருமணம் செய்து கொண்டார்.

ஆஸ்திரேலியா,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல். ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடும் கிளென் மேக்ஸ்வெல், கடந்த சீசனில் அபாரமாக விளையாடினார். இதையடுத்து அவரை ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது பெங்களூரு அணி.

கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்தார். வினி ராமன் ஆஸ்திரேலியாவில் பார்மஸி படித்தவர். இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது. 

அதன்பின்னர் கொரோனா அச்சுறுத்தல், லாக்டவுன் என நெருக்கடியான நிலை தொடர்ந்ததால் அவர்களது திருமணம் தள்ளிப்போனது. 

இந்த நிலையில், கிளென் மேக்ஸ்வெல் தனது நீண்ட நாள் காதலியான வினி ராமனை வெள்ளிக்கிழமை தனிப்பட்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்

இந்த ஜோடி தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மேலும் "காதல் என்பது நிறைவுக்கான தேடலாகும், உன்னுடன் நான் முழுமையாக உணர்கிறேன்" என்று வினி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எழுதியுள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் மேக்ஸ்வெல் விளையாடிவரும் பெங்களூரு அணி தம்பதியினருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.


Next Story