ஐ.சி.சி ஆல்-ரவுண்டர் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் ஜடேஜா..!


image courtesy: PTI
x
image courtesy: PTI
தினத்தந்தி 23 March 2022 7:21 PM GMT (Updated: 23 March 2022 7:21 PM GMT)

ஐ.சி.சி வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். 

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதமும், 9 விக்கெட்டும் கைப்பற்றிய போது முதலிட அரியணையில் ஏறிய ஜடேஜா அடுத்த டெஸ்டில் தடுமாறியதால் 2-வது இடத்துக்கு சரிந்தார். அதன் பிறகு வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர் முதலிடத்துக்கு முன்னேறினார். 

இந்த நிலையில் ஹோல்டர் (357 புள்ளி) இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் சோபிக்காததால் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து ஜடேஜா (385 புள்ளி) தானாகவே முதலிடத்துக்கு உயர்ந்துள்ளார்.

மேலும் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 3 இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் 10 இடங்களில் உள்ளனர். அதில் ரோகித் சர்மா, 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு தள்ளப்பபட்டுள்ளார். விராட் கோலி 9-வது இடத்திலும் ரிஷப் பாண்ட் 10-வது இடத்திலும் உள்ளனர்.

Next Story