ஐபிஎல் : விரேந்திர சேவாக்கிற்கு ,சுனில் நரைன் புகழாரம்..!


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 19 April 2022 11:28 AM GMT (Updated: 19 April 2022 11:28 AM GMT)

ஐபிஎல் போட்டிகளில் விரேந்திர சேவாக்கிற்கு பந்து வீசியது கடினமாக இருந்ததாக நரைன் தெரிவித்துள்ளார்

மும்பை,

ஐபிஎல் தொடரில் நேற்று  நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது .

இந்த போட்டி ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் விளையாடிய 150 வது போட்டியாகும்

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக்கிற்கு பந்து வீசியது கடினமாக இருந்ததாக நரைன் தெரிவித்துள்ளார் ,

 தனியார் செய்தி சேனல்-க்கு அவர் அளித்த பேட்டியில் ;

தங்களது பந்துவீச்சை யார் சிறப்பாக எதிர்கொண்டார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது .

அதற்கு பதிலளித்த நரைன் , சேவாக்  தனது பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார் என்றும் ,அவருக்கு பந்துவீசியதை எப்போதும் கடினமாக உணர்ந்ததாக கூறினார் .

மேலும் எந்த சூழலிலும் தனக்கே உரிய பாணியில் அதிரடியாக விளையாடியவர் சேவாக் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் .


Next Story