வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணியில் 4 புதுமுக வீரர்கள்


image courtesy: ICC twitter via ANI
x
image courtesy: ICC twitter via ANI
தினத்தந்தி 5 May 2022 12:51 AM GMT (Updated: 2022-05-05T06:21:32+05:30)

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் சட்டோகிராமில் வருகிற 15-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் மிர்புரில் 23-ந் தேதியும் தொடங்குகிறது. 

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விக்கெட்கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான கமில்மிஸ்ரா, சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் கமிந்து மென்டிஸ், இடக்கைவேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷனகா, சுழற்பந்துவீச்சாளர் சுமிந்தா லக்ஷன் ஆகியோர் புதுமுக வீரர்களாக அணியில் இடம் பிடித்துள்ளனர். 

கேப்டன் திமுத் கருணாரத்னே தலைமையிலான அணியில் தனஞ்ஜெயா டி சில்வா, குசல்மென்டிஸ், மேத்யூஸ், சன்டிமால், எம்புல்டெனியா உள்ளிட்ட முன்னணி வீரர்களும் அங்கம் வகிக்கிறார்கள். 

Next Story