இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டேரில் மிட்சேல், பிளெண்டல் சதத்தால் வலுவான நிலையில் நியூசிலாந்து


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டேரில் மிட்சேல், பிளெண்டல் சதத்தால் வலுவான நிலையில் நியூசிலாந்து
x

இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 412 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

நாட்டிங்காம்,

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் ஜோ ரூட்டின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களான வில் யங் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து டாம் லாதம் 26 ரன்னிலும், டேவன் கான்வே 46 ரன்னிலும், ஹென்றி நிகோலஸ் 30 ரன்னிலும் அவுட்டாகினர்.

அடுத்து இறங்கிய டேரில் மிட்செல், டாம் பிளெண்டல் ஆகியோர் பொறுப்புடன் ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர். முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்த நிலையில், தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் இருவரும் சதம் அடித்து அசத்தினர். இதில் பிளெண்டல் 106 ரன்னில் ஆட்டமிழந்தார். டேரில் மிட்சேல் 128 ரன்னுடன் களத்தில் உள்ளார். இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 412 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.


Next Story