நூற்றாண்டின் சிறந்த பந்து வீச்சு; திகைத்த பேட்ஸ்மேன் - வைரலான வீடியோ


நூற்றாண்டின் சிறந்த பந்து வீச்சு; திகைத்த பேட்ஸ்மேன் - வைரலான வீடியோ
x

திடீரென பந்து திரும்பி சரியாக ஸ்டம்பை தாக்கியது. அதனை எதிர்பாராத பேட்ஸ்மேன் அவுட் ஆனார்.

புதுடெல்லி,

குவைத்தில் நடப்பு ஆண்டின் கே.சி.சி. டி20 சேலஞ்சர்ஸ் கோப்பைக்கான போட்டி ஒன்று நடந்தது. இதில், குவைத் நேசனல்ஸ் மற்றும் எஸ்.பி.எஸ். சி.சி. அணியினர் இடையே நடந்த போட்டி ஒன்றில் டாஸ் வென்ற எஸ்.பி.எஸ்.சி.சி. அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

இதன்படி, இரு அணிகளும் விளையாடின. இதில், குவைத் அணியை சேர்ந்த பந்து வீச்சாளர் வீசிய பந்து, பேட்ஸ்மேனை நோக்கி சென்று, அவர் எதிர்பாராத வகையில் திடீரென திரும்பி ஸ்டம்பில் பட்டு அவரை அவுட்டாக்கி அதிர்ச்சியடைய வைத்தது. இதுபற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், பந்து வீச்சாளரின் சுழற்பந்து வீச்சில், பேட்ஸ்மேனின் ஆப்-ஸ்டம்புக்கு வெளியே முதலில் பந்து சென்றது. இதனால், பேட்ஸ்மேன் சற்று முன்னேறி அதனை அடிக்க முற்பட்டார். அப்போது, திடீரென பந்து திரும்பி சரியாக ஸ்டம்பை தாக்கியது. அதனை எதிர்பாராத அவர் அவுட் ஆனார். விரக்தியில் பேட்டை உதறியபடியே அவர் நடந்து சென்றார்.

இதனை, புதிதாக ஒரு நூற்றாண்டின் பந்து என்று சமூக ஊடக பயனாளர்கள் விமர்சித்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் கூட இந்த உரையாடலில் பங்கேற்றுள்ளனர். அனைவரையும் ஈர்த்துள்ள இந்த வீடியோவை பார்த்து பலரும் லைக் செய்து வருகின்றனர். போட்டியின் முடிவில் குவைத் அணி வெற்றி பெற்றது.


Next Story