பெண்கள் பிரீமியர் லீக்: முதல் ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி


பெண்கள் பிரீமியர் லீக்: முதல் ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி
x

பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி மும்பை அபார வெற்றிபெற்றது.

பெங்களூரு,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போன்று பெண்களுக்கு பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடரை கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது. முதல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் வெற்றது.

இதனிடையே, 2வது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றிபெற்றது.


Next Story