கடைசி வரை பரபரப்பு... மதுரையை கடைசி பந்தில் வீழ்த்தி குவாலிபையர் சுற்றுக்குள் நுழைந்த நெல்லை...!


கடைசி வரை பரபரப்பு... மதுரையை கடைசி பந்தில் வீழ்த்தி குவாலிபையர் சுற்றுக்குள் நுழைந்த நெல்லை...!
x

மதுரையை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நெல்லை அபார வெற்றிபெற்றது.

சேலம்,

நடப்பு டிஎன்பிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இன்று எலிமினேட்டர் சுற்று நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் மோதின. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி குவாலிபையர் சுற்றில் திண்டுக்கல் அணியை எதிர்கொள்ளும்.

இதனிடையே, இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ராஜகோபால் 76 ரன்களும், குருசாமி 50 ரன்களும் குவித்தனர். இதனை தொடர்ந்து 212 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் களமிறங்கியது. அந்த அணியின் ஆதித்யா 73 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரரான ஸ்வப்னில் சிங் 48 ரன்கள் குவித்தார்.

கடைசி ஓவரில் மதுரை வெற்றிபெற 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், மதுரை 14 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி பந்தில் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்ட நிலையில் மதுரை 2 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மதுரையை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நெல்லை திரில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நெல்லை குவாலிபையர் சுற்றுக்குள் நுழைந்தது.


Next Story