தோனி குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரிஷப் பண்ட்..!
ரிஷப் பண்ட், தோனி குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ராஞ்சி,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை பொதுமக்கள் புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
இந்நிலையில் இந்த தீபாவளி பண்டிகையை இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார்.
தோனி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு 50 ஓவர் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்றவற்றை வென்று கொடுத்துள்ளார். ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த கார் விபத்தில் சிக்கி அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பண்ட், தோனி குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Related Tags :
Next Story