டிஎன்பிஎல்: இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2வது அணி எது...? - திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் நாளை மோதல்...!


டிஎன்பிஎல்: இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2வது அணி எது...? - திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் நாளை மோதல்...!
x

Image Courtesy: @TNPremierLeague

டிஎன்பிஎல் தொடரின் 2வது குவாலிபையர் ஆட்டத்தில் நாளை திண்டுக்கல் டிராகன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

திருநெல்வேலி,

நடப்பு டிஎன்பிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகீய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

இதில் சேலத்தில் நடைபெற்ற முதலாவது குவாலிபையர் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.தோல்வி அடைந்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி குவாலிபையர் 2வது ஆட்டத்துக்கு சென்றது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி மதுரை பாந்தர்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி குவாலிபையர் 2வது ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. இதையடுத்து நாளை திருநெல்வேலியில் நடைபெறும் 2வது குவாலிபையர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வரும் 12ம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியை சந்திக்கும்.


Next Story