பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி...உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய ஆஸ்திரேலியா..!


பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி...உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய ஆஸ்திரேலியா..!
x

Image Courtesy: @ICC

பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது.

துபாய்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் 3-0 என பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா ஒயிட்வாஷ் செய்தது.

இந்நிலையில் இந்த தொடர் முடிவடைந்ததை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா (56.25%) முதல் இடத்திலும், இந்தியா (54.16%) இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா (50.00%) 3ம் இடத்திலும், நியூசிலாந்து (50.00%) 4ம் இடத்திலும், வங்காளதேசம் (50.00%) 5ம் இடத்திலும், பாகிஸ்தான் (36.66%) 6ம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் (16.67%) 7ம் இடத்திலும், இங்கிலாந்து (15.00%) 8ம் இடத்திலும், இலங்கை (00.00%) 9ம் இடத்திலும் உள்ளன.



Next Story