விஜய் ஹசாரே டிராபி; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா தமிழ்நாடு...அரியானாவுடன் இன்று மோதல்...!


விஜய் ஹசாரே டிராபி; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா தமிழ்நாடு...அரியானாவுடன் இன்று மோதல்...!
x

Image Courtesy: Twitter

நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் - கர்நாடகா அணிகள் மோத உள்ளன.

ராஜ்கோட்,

விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் மற்றும் முதன்மை காலிறுதி ஆட்டங்களின் முடிவில் அரியானா, பெங்கால், ராஜஸ்தான், கேரளா, விதர்பா, கர்நாடகா, மும்பை, தமிழ்நாடு ஆகிய 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இதையடுத்து கடந்த 11ம் தேதி நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - அரியானா அணிகள் மோத உள்ளன.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதையடுத்து இந்த தொடரில் நாளை நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் - கர்நாடகா அணிகள் மோத உள்ளன.


Next Story