ஆஷஸ் டெஸ்ட்; முதல் பந்தில் பவுண்டரி அடித்த க்ராவ்லி...பென் ஸ்டோக்சின் ரியாக்ஷன் - வீடியோ...!


ஆஷஸ் டெஸ்ட்; முதல் பந்தில் பவுண்டரி அடித்த க்ராவ்லி...பென் ஸ்டோக்சின் ரியாக்ஷன் - வீடியோ...!
x

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது.

பர்மிங்காம்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.

ஆஷஸ் என்பது இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும். ஆஷஸ் கவுரவத்துக்காக களத்தில் இவ்விரு அணி வீரர்களும் உணர்வுபூர்வமாகவும், ஆக்ரோஷமாகவும் மல்லுகட்டுவதால் இந்த தொடருக்கு என்று தனி அடையாளம் உண்டு.

குறைந்தது 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆஷஸ் தொடரை 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன. 6 தொடர் 'டிரா'வில் முடிந்துள்ளது. கடைசியாக 2021-22-ம் ஆண்டில் சொந்த மண்ணில் நடந்த ஆஷஸ் கோப்பையை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா சொந்தமாக்கியது. ஆனால் இங்கிலாந்து மண்ணில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றது கிடையாது.

தற்போதைய ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக் க்ராவ்லி மற்றும் பென் டக்கட் ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஆட்டத்துக்கான முதல் பந்தை பேட் கம்மின்ஸ் வீசினார். அந்த பந்தை ஜேக் க்ராவ்லி சந்தித்தார்.

அந்த பந்தை அவர் பவுண்டரிக்கு வீசினார். ஆஷஸ் தொடரின் முதல் பந்தை க்ராவ்லி பவுண்டரிக்கு விரட்டியதை பார்த்து ரசித்த கேப்டன் பென் ஸ்டோக்சின் ரியாக்சன் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.



Next Story