பெண்கள் பிரீமியர் லீக்: மும்பை அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி


பெண்கள் பிரீமியர் லீக்: மும்பை அணியை வீழ்த்தி  டெல்லி அபார வெற்றி
x

டெல்லி அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

புதுடெல்லி,

5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வந்தது. பெங்களூருவில் 11 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் லீக் ஆட்டங்கள் டெல்லியில் நடைபெறுகின்றன.

இதன்படி இந்த தொடரில் டெல்லியில் இன்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதல் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. கேப்டன் லானிங் அரைசதம் கடந்து 53 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷபாலி வர்மா 28 ரன்களில் கேட்ச் ஆனார். 33 பந்துகளில் 69 ரன்கள் குவித்த ஜெமிமா ரோட்ரிகுவெஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

மும்பை அணி சார்பில் பந்துவீச்சாளர்கள் ஷப்னம் இஸ்மாயில், சைகா இஷாக், பூஜா வஸ்திரகார் மற்றும் ஹேலி மேத்யூஸ் ஆகியோ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து தற்போது 194 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 20ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மும்பை அணியில் அமன்ஜோத் கவுர் 42 ரன்கள் எடுத்தார். டெல்லி அணியில் ஜெஸ் ஜோனாசென் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதனால் டெல்லி அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Next Story