புரோ கபடி: குஜராத்-பெங்களூரு ஆட்டம் ‘டை’


புரோ கபடி: குஜராத்-பெங்களூரு ஆட்டம் ‘டை’
x
தினத்தந்தி 17 Nov 2018 9:45 PM GMT (Updated: 17 Nov 2018 7:08 PM GMT)

புரோ கபடியில், குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டம் சமன் ஆனது.

ஆமதாபாத்,

6-வது புரோ கபடி லீக் தொடரில் ஆமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 68-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் புனே அணி 13-12 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. பின் பாதியில் முன்னிலை பெற்ற பெங்கால் அணி அதனை கடைசி வரை தக்க வைத்து கொண்டது. முடிவில் பெங்கால் அணி 26-22 என்ற புள்ளி கணக்கில் புனேவை வீழ்த்தியது. 69-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் சந்தித்தன. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 30-30 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 8 மணி), குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-உ.பி.யோத்தா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story