துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 22 Jan 2019 10:00 PM GMT (Updated: 22 Jan 2019 9:43 PM GMT)

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.


* 11-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி ஓ.எம்.ஆர். ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லுகோவ்ஸ்கோ மேக்சிம் (ரஷியா)- பாய்சாட்ஸி லுகா (ஜார்ஜியா) இடையிலான 7-வது சுற்று ஆட்டம் 56-வது காய் நகர்த்தலில் டிரா ஆனது. 7 சுற்று முடிவில் மேக்சிம் 6.5 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். பாய்சாட்ஸி லுகா, இந்தியாவின் கார்த்திக் வெங்கட்ராமன் உள்பட 5 வீரர்கள் தலா 6 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.

* ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்று சகாப்தம் படைத்த இந்திய அணியை தேர்வு செய்த, தேர்வு கமிட்டிக்கு கிரிக்கெட் வாரியம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. இந்திய அணியின் தேர்வு கமிட்டியில் இடம் பெற்றுள்ள 5 பேருக்கும் தலா ரூ.20 லட்சம் வழங்கப்படுகிறது.

* டர்பனில் நேற்று நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 45.5 ஓவர்களில் 203 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுக்கு 112 ரன்களுடன் தத்தளித்த பாகிஸ்தான் அணி, கேப்டன் சர்ப்ராஸ் அகமது (41 ரன்), ஹசன் அலி (59 ரன், 5 பவுண்டரி, 3 சிக்சர்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 200 ரன்களை கடந்தது. தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 33 ஓவர் முடிந்திருந்த போது 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்திருந்தது.

* வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் இன்று தொடங்குகிறது.

* ஆஸ்திரேலியா - இலங்கை இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன்களாக பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை துணை கேப்டன்களாக இருந்தவர்களில் மிட்செல் மார்ஷ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஹேசில்வுட் காயத்தால் இந்த தொடரில் ஆடவில்லை.


Next Story