ஆசிய முன்னாள் சாம்பியன் டிங்கோ சிங் சிகிச்சைக்கு குத்துச்சண்டை வீரர்கள் உதவி


ஆசிய முன்னாள் சாம்பியன் டிங்கோ சிங் சிகிச்சைக்கு குத்துச்சண்டை வீரர்கள் உதவி
x
தினத்தந்தி 22 April 2020 10:45 PM GMT (Updated: 22 April 2020 7:05 PM GMT)

ஆசிய முன்னாள் சாம்பியன் டிங்கோ சிங்கின் சிகிச்சைக்கு குத்துச்சண்டை வீரர்கள் உதவி செய்துள்ளனர்.

புதுடெல்லி, 

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முன்னாள் இந்திய குத்துச்சண்டை வீரரான டிங்கோ சிங் கல்லீரல் புற்று நோய் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்கு உதவும் முயற்சியில் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் மனோஜ்குமார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை ஒருங்கிணைத்து தனியாக ஒரு வாட்ஸ்-அப் குரூப்பை தொடங்கி உள்ளனர். இதன் மூலம் நிதி திரட்டி வருகிறார்கள். இதில் கிடைக்கும் நிதி டிங்கோ சிங்கின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.1 லட்சத்துக்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த நிதி திரட்டும் பணி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
  • chat