சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கால்இறுதிக்குள் நுழைந்தார் அல்காரஸ்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கால்இறுதிக்குள் நுழைந்தார் அல்காரஸ்
x
தினத்தந்தி 19 Aug 2023 12:11 AM GMT (Updated: 19 Aug 2023 11:02 AM GMT)

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் 'நம்பர் ஒன்' வீரர் கார்லஸ் அல்காரஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 13-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பாலை எதிர்கொண்டார்.

3 மணி 9 நிமிடம் நீடித்த திரில்லிங்கான இந்த மோதலில் அல்காரஸ் 7-6 (8-6), 6-7 (0-7), 6-3 என்ற செட் கணக்கில் டாமி பாலை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். அத்துடன் கடந்த வாரம் நடந்த கனடா ஓபன் கால்இறுதியில் அவரிடம் கண்ட தோல்விக்கும் பழிதீர்த்தார்.


Next Story